Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித புனரமைப்புக்களும் இன்றி முற்றாக தூர்ந்துபோயுள்ள 3 குளங்களும் ஒரு அணைக்கட்டும் கமநல அபிவிருத்தி வனபாதுகாப்பு அமைச்சினால் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.
வாத்திவெட்டுக்குளம், அழகர்குளம், ஆவெட்டியாகுளம் ஆகிய குளங்களும் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரான்புள் அணைக்கட்டும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.
இப்புனரமைப்பு தொடர்பாக அப்பகுதி விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் செயலமர்வு வந்தாறுமூலை காளி கோயில் வளாகத்தில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச விவசாய அதிகாரி கே.கந்தசாமி தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி பிரதம அமைப்பாளர் கலாநிதி டி.எம்.சந்திரபால பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இம்மாத இறுதிக்குள் இதற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இவை புனரமைக்கப்படுவதன் மூலம் சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியை பெறமுடியுமெனவும் விவசாய அதிகாரி தெரிவித்தார்.

.jpg)
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago