Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விற்பனை மடுப் பிரதேசத்தில் வயலில் வேளாண்மைக் காவலுக்காகச் சென்ற ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
வந்தாறுமூலையைச் சேர்ந்த பி.விஜயராசா (வயது 57) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். வான் சாரதியாகக் கடமையாற்றிய மேற்படி நபர் பின்னர் உழவு இயந்திர சாரதியாக தொழில் செய்து வருவதுடன், வயல் வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை வயல் வாடிக்குச் சென்ற மேற்படி நபரின் சகோதரர், மேற்படி நபர் மரணமடைந்துள்ளதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி வந்தாறுமூலையிலிருந்து வயலுக்குச் சென்ற மேற்படி நபர் நேற்றையதினம் வீடு திரும்பவிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளதாகவும் தான் அங்கு வந்து பார்த்தபோதே இவர் மரணமானமை தெரியவந்ததாகவும் அவரது சகோதரர் தெரிவித்தார்.
வயல் பிரதேசங்களில் யானைகளின் தொல்லைகளும் அதிகமாகும். ஆனால், இவரது மரணம் எவ்வாறு இடம்பெற்றதென்பது குறித்து எதுவும் தெரியவில்லையென சகோதரர் கூறினார்.
இது தொடர்பில் கரடியனாறு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago