Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
அநுராதபுரம் ஓயாமடுவ பகுதியில் நடைபெற்றுவரும் 'தேசத்துக்கு மகுடம்' கண்காட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று திங்கட்கிழமை பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஒவ்வொரு காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்திஅமைக்கப்பட்ட காட்சிக்கூடங்களையும் முதலமைச்சர் விசேடமாகப் பார்வையிட்டார்.
கிழக்கு மாகாணசபைக்குரிய காட்சிக்கூடங்களில் பஞ்சகர்மா ஆயுர்வேத சிகிச்சை முறைகள் பற்றி விரிவான விளக்கமளிக்கும் வகையில் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனும் கலந்துகொண்டார்.
.jpg)
.jpg)
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago