2026 மே 14, வியாழக்கிழமை

வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க ஊழியர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க ஊழியர்கள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் அ. தினேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் கடந்த கால நெருக்கடிகள், எதிர்காலத் திட்டங்கள்,  நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அரசாங்க உத்தியோகத்தர் சங்க உறுப்பினருமான பா.அரியநேத்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .