2026 மே 14, வியாழக்கிழமை

dd

வலஸ்முல்ல பிரதேச செயலகத்திற்கு வாகரை பிரதேச செயலக அதிகாரிகள் விஜயம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி,ஏ.எச்.ஏ.ஹூஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பிரதேச செயலக நிர்வாகப்பிரிவுகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்ட வாகரை பிரதேச செயலக அதிகாரிகள் அகில இலங்கை ரீதியில் சிறந்த பிரதேச செயலக நிர்வாகப் பிரிவாகத் தெரிவு செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை வலஸ்முல்ல பிரதேச செயலகத்திற்கு களவிஜயமொன்றை மேற்கொண்டனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை வரை இவர்கள் களவிஜயம் மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின்போது வலஸ்முல்லப் பிரதேச செயலாளர் தீபிகா கே.குணவர்தன மற்றும் அந்தப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பரஸ்பரமான சிறந்த நிர்வாகத்திற்கான செயற்றிறன் மிக்க கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

கடந்த முப்பது வருட காலத்தில் வாகரைப் பிரதேசத்திலிருந்து அரச உத்தியோகத்தர்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கு களவிஜயம் மேற்கொண்டது இதுவே முதற்தடவையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .