2026 மே 14, வியாழக்கிழமை

dd

அஷ்ரப்பின் மரணம் விபத்தா, சதியா என அரசு வெளிப்படுத்த வேண்டும்: பசீர்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் ஒரு விபத்தா அல்லது ஒரு சதியா என்பதை தற்போதாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் வலியுறுத்தியுள்ளார்.

காத்தான்குடியில் முபீன் பௌன்டேசன் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாழ்வாதார உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணம் தொடர்பில் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு பாரிய சந்தேகம் உள்ளது. அஷ்ரபின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமித்த விசாரணை ஆணைக்குழு தமது அறிக்கையினை சமர்ப்பித்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அந்த குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவில்லை. அந்த அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படத்தப்பட வேண்டும் என  அரசாங்கத்திடம் நான் கேட்கின்றேன்.

இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரபினது மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அவரின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் உள்ளன. இவரின் மரணம் சதியா அல்லது விபத்தா என்பதை அறிய வேண்டியுள்ளது.

இன்று எல்லா முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்ததன் பின்பும் முஸ்லிம்களின் பலம் என்ன? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்த பின்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உரிய அபிவிருத்தியின் பங்கு சரியாக கிடைத்துள்ளதா என்பதை நாம் கேட்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் கட்சிகளுக்குள் இருக்கின்ற முஸ்லிம்களின் ஆணையைப் பெற்ற பெரிய முஸ்லிம் கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உரிய அபிவிருத்தியின் பங்கை சரியாக அரசாங்கம் வழங்க வேண்டும். இதை தீர்த்து வைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும்  உண்டு.

அரசாங்கம் 18ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது அதற்கு முதன்முதலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினர். சிறிய கட்சிகள் யோசித்துக்கொண்டிருந்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலில் ஆதரவு தெரிவித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 3,4,5ஆவது தடவைகள் தேர்தலில் போட்டியிட முடியும். ஜனாதிபதியாக வரமுடியும் என்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியுள்ளது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு அவரை வெற்றியடையச் செய்வதற்கு காங்கிரஸ் ஆதரவையும் இதன் மூலம் வழங்கியுள்ளது. இந்நிலையில் அபிவிருத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு உரிய பங்கை அரசாங்கம் வழங்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் உண்டு. அதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் இவ்வாறான உதவிகளை வழங்க முடிந்துள்ளது. இரண்டு சந்தர்ப்பங்களில் எமது பேரம் பேசும் சக்தியினை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஆகும். இந்த சந்தர்ப்பங்களின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளும் என எதிர்பார்க்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் தோல்வியடையவில்லை. தனிநபர்கள் தோல்வியடைந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் கடந்த கால நாடாளுமன்றத் தேர்தல்களின்போது மாவட்டத்தின் ஒரு முஸ்லிம் பிரதேசமாவது நூறு வீதம் ஒன்றுபட்டு காங்கிரஸின் பக்கம் நின்றுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதேசங்களிலும் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் வாக்குகள் கிடைத்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்தது. எதிர்வரும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு பிரதேசமாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்காக நூறு வீதம் ஒன்றுபடும்.
அதற்காக எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்ய ஆயத்தமாக உள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியினை இல்லாமல் செய்ய முற்படக்கூடாது' என்றார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், எம்.ஜெமீல், எம்.எம்.இஸ்மாயில் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • nallawan Wednesday, 08 February 2012 11:56 PM

    டும் டும் டும் டும் டும்........ தோ்தல் வருகுது..... டும் டும் டும்......
    பஷீர் ரெடியாகி விட்டார். டும் டும் டும் இனி தத்தும் கேட்க மக்கள் ரெடியாகுங்க. டும் டும் டும்.......... இனி உரிமை பற்றி பேசப்போறார்கள் டும் டும் டும் ...... இனி அமைச்சுப் பதவியை துக்கி எறிவேன் என்கப் போறாங்க டும் டும் டும் .......

    Reply : 0       0

    rafeek Friday, 10 February 2012 03:47 AM

    ஐயோ ஐயோ

    Reply : 0       0

    atheek Valaichenai. Thursday, 09 February 2012 06:42 PM

    அஷ்ரப் சேரின் மறைவுக்குப் பிறகு தவிசாளர் எத்தனை தடவை பிரதி அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் எழுப்பாத கேள்வியை இப்ப கேட்கார். என்ன பிரதி அமைச்சரே மாகாண சபைத் தேர்தல் 2012ல் நடக்கப் போகுதோ?

    Reply : 0       0

    hall Thursday, 09 February 2012 06:24 PM

    இவர் ஜனாதிபதிடம் கேட்கே வேண்டியே கேள்விய ஏன் மக்களிடம் கேட்கிறார்? இதை எல்லாம் பாராளுமன்றத்தில கேட்க சொல்லி தானே இவரை பாராளுமன்றம் அனுப்பினோம் ? இவர் திரும்ப வந்து எங்களிடத்தில் கேட்கிறார் ..

    Reply : 0       0

    M I M Kaleel Thursday, 09 February 2012 04:14 PM

    கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க.

    Reply : 0       0

    siriththiran Thursday, 09 February 2012 03:46 PM

    ஆகவே 18 ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவு குடுத்த செயலை நீங்க இன்னும் நியாயபடுத்த போறிங்களா?

    Reply : 0       0

    ulava Thursday, 09 February 2012 03:31 AM

    சோழியன் குடுமி சும்மா ஆடாது .......தேர்தல் வாசம் வருது ....., பசீர் சொரண்டிப் பார்க்கார் அதிஸ்டம் இருக்கா எண்டு .........

    Reply : 0       0

    AL-AQSA Thursday, 09 February 2012 03:20 AM

    மேல் உள்ள கருத்துக்களை பார்க்கின்றபோது இனி மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என்று விளங்குகின்றது. மிக்க மகிழ்ச்சி.

    Reply : 0       0

    musthafa ahamed azeem Thursday, 09 February 2012 02:18 AM

    இவ்வளவு நாலும் பசீர் சேகுதாவூத் ஏன் மறைந்த தலைவர் அஸ்ரப் அவரின் மரணம் பற்றி இப்பதான் கேட்க ஜாபகம் வந்திச்சோ?

    Reply : 0       0

    Jameel Wednesday, 08 February 2012 08:20 PM

    kalkuda makkalin votil vanthavar neenkal marakka koodathu

    Reply : 0       0

    mohamed Wednesday, 08 February 2012 09:36 PM

    உங்களுக்கு தெரியாதா பசீர். முஸ்லிம் காங்கிரெஸ் போராளிகல விட உங்களுக்கு நல்லா தெரியும் தான?

    Reply : 0       0

    kulam cader ashhar Wednesday, 08 February 2012 09:18 PM

    தேர்தல் வருகிறதா திடீர் ஞானம்

    Reply : 0       0

    Ahmed Junaid Wednesday, 08 February 2012 09:01 PM

    மர்ஹும் அஷ்ரபின் மரணம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இரண்டாயிரத்து ஓராம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி கல்முனை நகர மண்டபதித்கு முன் "மக்கள் நீதி மன்றதித்கு முன் முறையீடு "எனும் பொதுகூட்டத்தில் "தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னணியில் நடந்த பல விடயங்கள் இன்னும் பகிரங்கமாக சொல்லபடாத விடயங்களாகவே இருக்கின்றன அப்படியான பல விடயங்கள் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன .பலர் நேரில் வந்தும் சொல்லுகிறார்கள் எழுதியும் தருகிறார்கள்.... .

    Reply : 0       0

    ummpa Wednesday, 08 February 2012 08:45 PM

    எதையாவது கதைக்கவேண்டும் அதுதானே உங்கள் நிலைமை. உங்களால் ஏன் கட்சியால் வழக்கு தொடரமுடியாமல் இருக்கிறீர்கள். அந்த மாமனிதன் போட்ட பிச்சை இன்று எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நினைத்து பார்க்காத ராஜா வாழ்க்கையுடன் இருக்கிறார்கள்.

    Reply : 0       0

    A.R.M. From Jeddah Wednesday, 08 February 2012 08:41 PM

    இப்பதான் ஞானம் பொறந்திருக்கு....

    Reply : 0       0

    meenavan Wednesday, 08 February 2012 08:35 PM

    எழும்பிட்டாங்க ஐயா எழும்பிட்டாங்க இனி என்ன அடுத்த தேர்தலின்(மாகாண சபை) மகுடி வெளியாகுதோ? முதலமைச்சர் கனவில் உள்ளவர் இனி எதிர்பார்க்கலாம் கொல வெறி வார்த்தை ஜாலங்கள். உங்களது பேரம் பேசல் என்பது அமைச்சர் பதவிகளுக்கு தானே? தாலி அறுந்தாலும் பரவாய் இல்லை பதவி பறிபோககூடாது.

    Reply : 0       0

    Nowfer Wednesday, 08 February 2012 08:32 PM

    Mr. Basheer Segudawood. Why did not asked this question in the Parliament. Now Provincial Council Election coming very soon that why you are going to release new story to foolish people. well done go ahead.There are heavy rain in your jungle. Allah is looking everything.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .