2026 மே 14, வியாழக்கிழமை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியசாலை தாதியர்கள் கவன ஈரப்புப் போராட்டம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எம்.சுக்ரி,ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கடமையாற்றும்  தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  இன்று கவன ஈர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியசாலைகளில் கடமைபுரியும்  தாதியர்களே இவ்வாறு கவனஈர்ப்பு போராட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று பகள் 12 மணிக்கு ஆரம்பமான இவர்களின் கவன ஈர்ப்பு போராட்டம் பிற்பகள் ஒருமணி வரை நடைபெற்றது.

வேலை நாட்களை ஐந்து நாட்களாக குறைக்க வேண்டும், அரசாங்க தாதியர்களின் சீருடை கொடுப்பனவை 15,000 ரூபாவால் உயர்த்த வேண்டும், மேலதிக நேரக்கொடுப்பனவை 180 நாட்களால் அதிகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைத்து இவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .