2026 மே 14, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பெயர் பொறித்த நினைவு படிவங்கள் சேதம்

Super User   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரினால் ஏறாவூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட விசமிகள் அவரின் பெயர் பொறித்த நினைவு படிவங்களை அழித்தொழிக்கும் கேவலமான செயல்களை மேற்கொள்கின்றனர் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதேசத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைரினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்காக பொறித்த நினைவு படிவங்கள்  அண்மையில் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாகாண அமைச்சரின் ஊடக  பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்லேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இவ்வாறான செயல்கள் அவர் மேற்கொள்ளும் துரித அபிவிருத்தி மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இருக்கின்றது.இவ்வாறான செயற்பாட்டினால் ஒரு போதும் மாகாண அமைச்சரினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளை முடக்க முடியாது.

அமைச்சர் செய்யும் அபிவிருத்தித் திட்டங்களை கண்டு பொறாமை கொண்டு வெளிப்பாட்டினை இவ்வாறு வெளிப்படுத்தாமல் சிறந்த அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர நினைவு  படிவங்களை உடைப்பதென்பது கோழைகளின் கையாலாகாலாததனமாகவே நாம் பார்க்கிறோம்.

அமைச்சரின் அபிவிருத்தி பணிகளில் நேரடியாக எதிர் கொள்ளதிராணியற்ற இவ்வாறான முதுகெலும்பற்ற விசமிகளை விரைவில் மக்கள் இனங்கண்டு கொள்வார்கள்.

ஏறாவூரில் இப்போது நடக்கும் அபிவிருத்தி  பணிகளை விட பன் மடங்கு அபிவிருத்தி பணிகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் மேற்கொள்ளப்படத்தான் போகின்றன. இவ்வாறான கோழைகளால் ஒரு போதும் அதை தடுக்க முடியாது".


  Comments - 0

  • razeek kalmunai Thursday, 09 February 2012 08:48 PM

    இவ்வாறான ஊர்க்கு உதவா வேலைகளை விட்டு விட்டு ஊர் அபிவிருத்திகளில் தன்னை அர்பணிக்கும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் அவர்களுடன் கை கோருங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .