Kogilavani / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா, கே.எஸ்.வதனகுமார், லோஹித்)
இலங்கை சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட தொழில் வழிகாட்டல் திட்டத்தில் தொழில் பயிற்சியைப் பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 112 இளைஞர், யுவதிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள், தலா 5000 ரூபா காசோலை, சாரதி, கணினி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டன.
வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் மா.சசிகுமார் தமைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.ஜே.கபூர், பிரதேச செயலாளர், என்.வில்வரெத்தினம், இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் பேனார்ட் பிரகாஷ், கிராம சேவை அதிகாரிகள், இளைஞர் யுவதிகள், என பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago