2026 மே 14, வியாழக்கிழமை

dd

வியாபார நடவடிக்கைகளுக்காக சென்றவர் வீடுதிரும்பவில்லையென பொலிஸில் முறைப்பாடு

Kogilavani   / 2012 பெப்ரவரி 11 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஸரீபா)

வெலிக்கந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செவனப் பிட்டிப் பகுதிக்கு கடந்த 4ஆம் திகதி வியாபார நடவடிக்கைகளுக்காக சென்ற ஏறாவூரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் காணமல் போயுள்ளமை தொடர்பில் ஏறாவூர, வெலிக்கந்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் - 2 ஓடாவியார் வீதியைச் சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் இப்றாஹீம் (வயது 42) என்றழைக்கப்படும் 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணமல் போனவராவார்.

ஏறாவூரில் இருந்து தினமும் வியாபார நடவடிக்கைகளுக்காக செல்லும் இவர் வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்ததும் தனது வீட்டுக்கு வந்து விடுவது வழக்கமாகும்.

ஆனால் கடந்த 4ம் திகதியன்று காலையில் ஏறாவூரில் இருந்து வெலிக்கந்த செவனப்பிட்டி பகுதியில் வியாபாரத்திற்கு சென்ற இவர் இன்றுவரை வீடு திரும்ப வில்லை என குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .