Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலவத்தை கிராமத்திலுள்ள தோட்டமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
ஒல்லிமடுவாள் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி (வயது 52) என்பவரது சடலமென அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் சடலமொன்று காணப்படுவதாக கிராம மக்கள் வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago