2026 மே 14, வியாழக்கிழமை

மௌலவிமார்களுக்கான விஷேட தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Kogilavani   / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அரபுக் கல்லூரிகளிலும் பட்டம் பெற்றபின்னர் தொழில் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள மௌலவிமார்களுக்கான விஷேட தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று மாலை காத்தான்குடி அன்வர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கு, மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து பல்வேறு அனுபவங்களைப் பெற்று தற்போது இலங்கையில் கடமையாற்றும் தேர்ச்சிபெற்ற உலமாக்களைக் கொண்டு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர், காத்தான்குடியைச்சேர்ந்த அறபுக் கல்லூரிகளின்; அதிபர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் அறபு மொழித்தேர்ச்சியுடன் காணப்படும் மௌலவிமார்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் உயர்சம்பளத்துடனான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு மௌலவிமார்கள் மேலதிகமாக எத்தகைய தகைமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவுரையாளர்களினால் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அகடமி  நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரினால் வெளிநாடுகளில் எமது மௌலவிமார்களுக்கு காணப்படும் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் இவ் வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கான மேலதிக தகைமைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நிறுவனத்தினால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறிகள் தொடர்பாகவும் பாடநெறி இணைப்பாளரினால் விளக்கமளிக்கப்பட்டது.

இப்பாடநெறிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .