Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
கிழக்கு மாகாண சபையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடு, நகர கட்டளை திருத்தச் சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டமூல திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
இச்சட்டமூலம் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக உள்ளதனாலும் மாகாணத்திலுள்ள மத வழிபாட்டுத் தலங்களை புத்தசாசன அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் சுவீகரிப்பதற்கு இத்திருத்தச் சட்டமூலம் வழிவகுப்பதனாலும் இதனை எதிர்ப்பதற்கு நாம் முடிவு செய்துள்ளோம் என அவர் கூறினார்.
இத்திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக பௌதீக திட்டமிடல் பேரவை ஒன்று அமைக்கப்படவுள்ளது. அப்பேரவையில் சிறுபான்மை சமூகத்தின் அங்கத்துவம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கிழக்கு மாகாண சபையிலுள்ள எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என யு.எல்.எம்.என்.முபீன் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
Avathani Monday, 13 February 2012 12:10 AM
சபாஷ் அரசுக்குள் இருந்தாலும் முதுகெலும்பு உண்டு என்று சொல்லும் தைரியம் முஸ்லிம் காங்கிரசுக்கு மட்டும்தான் உள்ளது என்று மீண்டும் நிரூபிப்போம்.
தனிப்பட்ட முறையில் பாரிய பதிப்பு இருந்தும், கட்சி அழியும் நிலை ஏற்பட்டபோதும், தலைவரின் பாதுகாப்பு பறிக்கப்பட்டபோதும் இதை பலமுறை நிரூபித்துள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இது தொடர அனைவரும் பிரார்த்திப்போம்.
Reply : 0 0
sirajmohamed Monday, 13 February 2012 04:56 AM
அல்ஹம்துலில்லாஹ்.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Monday, 13 February 2012 06:46 PM
என்றும் நம்மோடு இறைவன் துணை நிற்பான் . நம் மக்களுக்கு எதிராக எது நடந்தாலும் அதன் பக்கம் நாம் சென்று விட கூடாது
தட்டி கேளுங்க. எதிராக வாக்களிங்க நாங்க இருப்பம் பக்க பலமாக டோன்ட் வொர்ரி. நமக்கு பாதுகாப்பாக இறைவன் இருப்பான்.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Monday, 13 February 2012 06:50 PM
எங்கள் தாய் நாடு ஸ்ரீ லங்கா எங்களுக்கான அனைத்தும் கிடைக்கனும் உரிமை. இல்லைனா கடைசி வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் உடன் இருந்து போராடுவோம். இறைவன் இருப்பான் துணையாக.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago