2026 மே 09, சனிக்கிழமை

பாம்பு புற்றிலிருந்து நாக பாம்பு சிலைகள் கண்டெடுப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு, இலுப்பட்டிச்சேனை  வேப்ப வட்டுவான் பகுதியைச் சேர்ந்த நபரொருவரின் வீட்டுச் சூழலில் இருந்து இரண்டு நாக பாம்பின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து தெரிவிக்கப்படுவதாவது,

கடந்த வியாழக்கிழமை இரவு அன்பழகன் என்ற நபரின் கனவில் வந்த ஒருவர் 'உனது வீட்டின் பின்னாலுள்ள புற்றில் நாக சிலை உள்ளது' என கூறிச் சென்றுள்ளார்.

பின்னர் அடுத்த நாள் காலை அன்பழகன் தனது வீட்டின் பின்னாலுள்ள புற்றினை பார்க்கையில்  ஐந்து தலையுடைய நாக சிலையும்   ஒரு தலையடைய நாகசிலை ஒன்றும் காணப்பட்டுள்ளன.

தற்போது மேற்படி நபர் அவ்விடத்தில் இரண்டு சிலைகளையும் வைத்து பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றார்.



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .