Kogilavani / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, வெல்லாவெளி- போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மீள்குடியேற்ற மீனவரகளுக்கு மீன் வியாபாரப் பெட்டிகள் இணைக்கப்பட் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைக்காக இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் திருமதி ருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது வன்னிநகர், கோயில்குளம், தம்பலவத்தை ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட 25 மீனவர்களுக்கு இந்த துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
இப்பொருட்கள் இப்பகுதி உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பெரும் உறுதுணையாக அமையும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் ஏனைய பிரதேச செயலகங்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago