Kogilavani / 2012 பெப்ரவரி 15 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு நெல் உற்ப்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் தற்போதைய நெற் கொள்வனவு மற்றும் அதற்கான விலை நிர்ணயனம் தொடர்பான பிரச்சினைகள் அவற்றுக்கான உடனடித் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு கோபின் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் இலங்கை வர்த்தக கைத்தொழில்கள் சம்மேளனங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் ஏ.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.குலசேகரம் மற்றும், கிரான் பகுதிக்கு பொறுப்பான விவசாய பெரும்பாக உத்தியோகஸ்த்தர் ளு.கந்தசாமி, ஓக்ஸ்பாம் வர்த்தக சம்மேளனத்தின் மாவட்ட உறுப்பினர், இலங்கை வர்த்தக கைத்தொழில்கள் சம்மேளனங்களின் கூட்டமைப்பின் மாவட்ட இணைப்பாளர் தி.உதயராஜா, இலங்கை வர்த்தக கைத்தொழில்கள் சம்மேளனங்களின் கூட்டமைப்பின் மாவட்ட திட்ட உத்தியோகஸ்த்தர் சி.தணிகசீலன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரிய சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தற்போது நெல் கொள்வனவில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டன.
விவசாயிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் நன்மை கருதி நடைமுறைப் படுத்தவேண்டிய முடிவுகள் பல இதன்போது முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனம் அமைத்தல், மட்டக்களப்பு மாவட்ட கூட்டறவு அபிவிருத்தி சபை மூலம் விவசாயிகளின் நெல்லை மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்தல், கொள்வனவு செய்த நெல்லை கேள்விப் பத்திரத்தின் மூலம் நல்ல அரிசியை உற்ப்பத்தி செய்யும் ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் உதவியுடன் உத்தரவாத விலையில் விற்;பனை செய்தல், அவற்றை தரம் குறையாத வண்ணம் அந்த அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்தல், கிரான் பிரதேச செயலகம் மற்றும் வவுனதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கான பூர்வாங்க செயற்திட்ட கலந்துரையாடல் எதிர்வரும் 23ஆம் திகதி நடாத்துதல் போன்ற முடிவுகள் இதன்போது எடுக்கப்பட்டன.
.jpg)
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago