Kogilavani / 2012 பெப்ரவரி 16 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மகாவெலி வெலிக்கந்த திட்டத்தின் கீழ் உள்ள ஜெயந்திபுர குளம் பிதிரயமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்வின் முயற்சியினால் புனரமைக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி குளமானது கடந்த 20 வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில், அண்மையில் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்த குளத்தினை பார்வையிட்டார்.
இது தொடர்hக நீர்ப்பாசன அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வாவின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து குறித்த குளத்திற்கான புனரமைப்பிற்கு தேசிய நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இக்குளம் முற்றாகப் புனரமைக்கப்படுவதோடு றிதிதென்ன, ஜெயந்தியாவில் உள்ள வாய்க் கால்களையும் புனரமைக்குமாறு பிரதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்குளம் புனரமைக்கப்படுவதன்; மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நன்மையவுள்ளனர்.
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago