Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை பிரதேசம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கொக்கட்டிச்சோலை கருணா அம்மான் கலாசார நிலையத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த காலத்தில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனைகள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் புதிய மதுபான சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்ததாகவும் இருப்பினும் புதிய மதுபான சாலைக்கான அனுமதி எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் இங்கு உரையாற்றிய மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்றிலிருந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை புனித பிரதேசமாக அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
பட்டிப்பளை - கொக்கட்டிச்சோலை பிரதேச செயலாளர் வாசுகி அருள்தாஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பட்டிப்பளை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தையும் பார்வையிட்டனர்.
கடந்தகால யுத்தத்தின்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதேசம் தற்போது மீள்ளெழுச்சி பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
neethan Sunday, 19 February 2012 06:55 PM
பிரதேசத்தை புனிதமாக பிரகடனம் செய்வதை போன்று தங்களையும் புனிதமாக்குவதற்கு பிரக்ஞை எடுங்கள்.
Reply : 0 0
nation. Monday, 20 February 2012 03:05 PM
கொக்கட்டி சோலை படுகொலை பிரதேசத்தையும் பாதுகாருங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago