Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ளாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்துகொள்ளாது என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் த.விவேகானந்தன் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
'வெல்லாவெளி கிராமம் கடந்தகால யுத்த வரலாற்றிலே தரைமட்டமான கிராமம் என்று எமக்கு மட்டும் அல்ல பல நாடுகளுக்கும் தெரியும். இம்மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும் முகம்கொடுத்து 03 தடவைகள் சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர். அரசாங்கம் இவர்களை சிறந்த முறையில் மீள்குடியமர்த்தவில்லை.
தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்துகொள்ளாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்துகொள்ளாது. எது எவ்வாறானாலும்; தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும்வரை எமது போராட்டம் தொடரும்' என்றார்.
இவ் விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், விசேட விருந்தினராக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளைநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago