2026 மே 09, சனிக்கிழமை

புதையல் தோண்டிய மூன்று பேர் கைது

Super User   / 2012 பெப்ரவரி 19 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வாகரை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதவாச்சி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரும் பொலநறுவை பகுதியைச் சேர்ந்தவரும் ஓமடியாமடுவை சேர்ந்த நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்கள் வாழைச்சேனை பதில் நீதிவான் ஹுசைன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .