2026 மே 09, சனிக்கிழமை

ஏறாவூருக்கு கட்டார் அகடமி பிரதிநிதிகள் குழு விஜயம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி,ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதிக்கான  விஜயமொன்றை கட்டார் அகடமி பிரதிநிதிகள் குழுவினர் நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டனர்.    

ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிலையத்தின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு விஜயம் செய்த இவர்கள், ஏறாவூர் நகர சபைத் தலைவர் அலிசாகீர் மௌலானாவை ஏறாவூர் நகர சபை அலுவலகத்தில் சந்தித்தனர்.

ஏறாவூரில் மாதிரி சந்தைக்கட்டிடம்,  பொதுநூலகம், கணினி பயற்சிக்கூடம் என்பவற்றை நிர்மாணித்துத் தருமாறு ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலான கட்டர் அகடமி பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கட்டார் அகடமி குழுவினர் ஏறாவூரிலுள்ள அலிகார் தேசிய பாடசாலை, மிச்சி நகர் அரசினர் கலவன் பாடசாலை, ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையம், ஏறாவூர் விசேட தேவை பாடசாலை ஆகியவற்றுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினர். அத்துடன், தாமரைக்கேணியிலுள்ள குடியேற்ற கிராம மக்களுக்கு 3,500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்களையும் வழங்கியதுடன், பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கான பயற்சி செயலமர்வொன்றையும் நடத்தினர்.


  Comments - 0

  • rimsan Wednesday, 22 February 2012 09:50 PM

    ஏராவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .