2026 மே 09, சனிக்கிழமை

தமிழர்கள், முஸ்லிம்கள் தனித்தனியாக குரல் கொடுப்பதால் விமோசனமில்லை: யோகேஸ்வரன் எம்.பி

Super User   / 2012 பெப்ரவரி 21 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

"கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கமிடையில் ஏற்பட்ட சில கசப்பான உணர்வுகளினால் தனித்தனியாக அரசியல் அபிலாசைகளுக்காக குரல் எழுப்ப வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சிறுபான்மை இனமான தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ எந்த விமோசனமும் கிடைக்கவில்லை. இதனால் பேரினவாத சக்திகளே பயன்பெற்றார்கள். இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்" என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்;.

கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசத்திலுள்ள 110 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை செம்மண்ணோடை அல் - ஹம்றா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஜப்பான் சோட்டோஹான் கராத்தே சங்க கல்குடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்றஉறுப்பினர்,

"35 வருடங்களுக்கு முன்பு எமது அரசியல் வரலாற்றை நோக்கினால் கிழக்கில் பல முஸ்லிம் அரசியல் தலைமைகளை உருவாக்கிய பெருமை தமிழரசு கட்சிக்கு உரியது.

அம்பாறை மாவட்டத்தில் அரசியலில் கொடிகட்டி பறந்த முஸ்லிம் தலைவர்களான எம்.எஸ்.காரியப்பர்இ எம்.எம்.முஸ்தபாஇ எம்.சி.அகமதுஇ மூதூர் தொகுதி  முகமதுஅலி போன்றவர்கள் தமிழரசு கட்சியின் ஊடாகவே நாடாளுமன்றம் பிரவேசித்ததை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கை தமிழரசுக் கட்சி தனக்கு கிடைத்த செனட்டர் பதவியை மசூர் மௌலானாவிற்கு கொடுத்து அலங்கரித்தது. அத்துடன் முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவரான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் வளர்ந்தவர் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வேறு வேறு அரசியல் கட்சிகளாக இருந்தாலும் இரு சமூகங்களும் ஒருமித்த கருத்தை கொண்டிருக்கிறோம் குறிப்பாக எமது கட்சி இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை காணும் போது முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வும் இடம்பெறவேண்டும் என உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
 
எமது மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 1977க்கு மேற்பட்ட அரசியலை நோக்கினால் கல்குடா தொகுதியில் முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட தேவநாயகம் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட மாணிக்கவாசகம் மற்றும் சம்மந்த மூர்த்தி போன்றோரை ஆதரித்தார்கள்.

இது இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு அடித்தளமாக அமைந்தது. இப்போது அப்படியான அரசியல் இல்லை. தேர்தல் காலங்களில் சில தரப்பினரால் இனவாதமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும்: என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .