2026 மே 09, சனிக்கிழமை

காத்தான்குடி வீடொன்றில் கைக்குண்டுத் தாக்குதல்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவ்வீட்டின் முன்பகுதி சிறிய சேதத்துக்குள்ளாகியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் கூறினர்.

காத்தான்குடி பெரிய ஜும் ஆப் பள்ளிவாசல் வீதியிலுள்ள முகம்மது சாஜித் என்பவரது வீட்டின் மீதே இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது. இதனால் அவ்வீட்டின் முன்பக்க யன்னல் கண்ணாடிகள், கதவு, ஆகியன சேதமடைந்துள்ளதுடன், திரைச்சீலையும் எரிந்துள்ளன.  இருப்பினும் அவ்வீட்டில் உறக்கத்திலிருந்த எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் கூறினார்.

இது பெற்றோல் குண்டாக இருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இக்கைக்குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .