2026 மே 09, சனிக்கிழமை

கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கல்குடா தொகுதி பாடசாலைகளின் அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் கல்குடா வலய கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாடசாலைகளின் அடைவு மட்டங்கள், கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றின் பெறுபேறுகளின் வளர்ச்சிப் படிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள ஏனைய கல்வி வலயங்களுடன் ஒப்பிடுகின்றபோது கல்குடா கல்வி வலயத்தினது கல்வி வளர்ச்சி மிகவும் குறைந்த நிலையிலேயே தென்படுகின்றது. இதனை எதிர்வரும் காலங்களில் நிவர்த்தி செய்வதன் பொருட்டு பாடசாலையின் அதிபர்களுக்கு தெளிவூட்டுவதற்காகவே இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் இங்கு குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்;ட உதவிச் செயலாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கல்குடாவலய கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் அகிலா, முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் தவேந்திராஜ், கல்வி வலயத்தின் அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.


 

 


  Comments - 0

  • Iya Saturday, 25 February 2012 12:24 AM

    சிரிப்பு வருகிறது. யார் யார் எதைப்பற்றி பேசுவதென்று தெரியாமல் இருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .