Menaka Mookandi / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவரின் கொலை தொடர்பில் ஆட்டோ சாரதி ஒருவர் உட்பட நால்வர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரிடமும் விசாரணைகள் நடைபெற்று வருடவதுடன் மேலும் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு, புளியடி வீதியில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் சின்னத்தம்பி இளையதம்பி (வயது 63) என்பவரது சடலம் இன்று புதன்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.
இந்த மரணம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago