Menaka Mookandi / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித், எம்.சுக்ரி)
மட்டக்களப்பு, வின்சன்ற் மகளிர் தேசியப் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலை அங்கிருந்து நேற்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது. வின்சன்ற் மகளிர் தேசியப் பாடசாலையானது மெதடிஸ்த திருச்சபையின் கீழ் கட்டப்பட்டு 1960 ஆண்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பாடசாலையில் மூன்று மதங்களை சேர்ந்த மாணவிகளும் கல்வி கற்று வந்த நிலையில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று வியாழக்கிழமை புதிய கட்டிடத் திறப்பு விழாவிற்கு வருகைதந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷவினால் மேற்படி சிலையும் திறக்கப்படவிருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் முதல் குறித்த பாடசாலையின் பழைய மாணவர்களும், மெதடிஸ்த மற்றும் கிறிஸ்தவ அமைக்களும் மேற்கொண்ட எதிர்ப்பு காரணமாக நேற்று காலை அச்சிலை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

34 minute ago
1 hours ago
4 hours ago
யாழரன் Friday, 24 February 2012 08:17 PM
கல்வித் தெய்வம் என்பது ஒரு இனத்துக்கான தெய்வம் என்று சொல்வதை விட கலைகளுக்கு எல்லாம் முதலானவள் என்பதை நாம் உணர வேண்டும். சிலையை வைக்கும் வரை பார்த்து விட்டு வைத்த பின்னர் கோஷம் போடுவது தவறு. அவ்வாறு சிலையை மீண்டும் எடுத்தது மிகப் பெரிய பிழை.
பாடசாலை என்பது அனைத்து மாணவர்களும் சமத்துவமாக வாழும் ஓர் குடும்பமாகும்.
இங்கும் இன, மத வேறுபாட்டை கொண்டு வர வேண்டாம். மாணவர்களாய் அனைவரும் ஒன்றே.....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago