2026 மே 09, சனிக்கிழமை

காணமல் போனவர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், லோஹித், ஸரீபா)

 

வெலிக்கந்தை பிரதேசத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன நபரொருவர் இன்று  சனிக்கிழமை உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் ஓடாவியார் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ஐ.எம்.இப்றாஹீம் (வயது 42) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த 4ஆம் திகதி வெலிக்கந்தை செவனப்பிட்டி பிரதேசத்திற்கு வியாபாரத்திற்காக சென்றிருந்த வேளை காணாமல் போனதாக அவரது குடும்ப உறவினர்கள் வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .