Kogilavani / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, வதனகுமார்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் ஆன்மீக நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இளம் உள்ளங்களுக்கு ஆன்மீக சுகம் எனும் செயற் திட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஹிஸ்புல்லா மண்டபத்தின் நுழைவாயிலில் இருந்து ஆன்மீக ஊர்வலமொன்று நடைபெற்றது.
இதையடுத்து ஹிஸ்புல்லா மண்டபத்தில் ஒன்று கூடல் ஒன்றும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், விஸ்ம பிரம்மன் வை ஸ்ரீ காந்தன் குருக்கள், மௌலவி எம்.எச்.எம்.புகாரி, அருட்தந்தை ரஜீவன் இருதய ராஜ், பௌத்த மதகுரு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜே.கபூர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரி திருமதி கலாரானி,அதன் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago