2026 மே 09, சனிக்கிழமை

dd

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன காத்தான்குடி விஜயம்

Super User   / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் காத்தான்குடி பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிதியுதவியுடன் காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்ட ஸாவிய்யா மகளிர் வித்தியாலய கட்டிடத்தை இதன்போது கல்வி அமைச்சர் திறந்துவைத்தார்.

அத்துடன் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ள காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் பெயர் பலகையையும்  அமைச்சர் பந்துல குணவர்தன திரை நீக்கம் செய்துவைத்தார்.

இந்நிகழ்வுகளில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை அதிகாரி அஸதுர் றஹ்மான், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் மட்டு மத்தி வலய கல்வி பணிப்பாளர் யூ.எல்.செயினுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .