2026 மே 09, சனிக்கிழமை

வின்சன்ட் மகளிர் கல்லூரி குறித்து கிழக்கு முதலமைச்சர் – ஆயர் சந்திப்பு

Super User   / 2012 பெப்ரவரி 26 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் வைக்கப்பட்ட சரஸ்வதி உருவ சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டு – திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாமபிள்ளையை நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

"கிறிஸ்தவ பாரம்பரியத்தை கொண்ட ஓர் பாடசாலையில் அது சார்ந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தெரியாமல் திடீரென சிலை வைத்தமை தங்களுக்கு மனவேதனை அளிப்பதாக உள்ளது.

இதேவேளை, பாடசாலை நிர்வாகம்  சரியான முறையில் இதனை அணுகியிருந்தால் இவ்வாறான ஒரு பாராதுரமான பிரச்சினை தோன்றியிருக்காது'" என ஆயர் முதலமைச்சரிடத்தில் இதன்போது சுட்டிக்காட்டியதாக முதலமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உண்மையில் இன நல்லுறவுடன் கூடிய ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பில் பாடசாலைகளின் பங்கு அளப்பரியது.

அவ்வாறு இருந்தும் மதம் சார்ந்த பிரச்சினைகள் மாணவர்கள் மத்தியிலே உருவாக்கப்படுதற்கான சூழலை இச்சம்பவம் ஏற்படுத்தி இருப்பது உண்மையில் வேதனையளிக்கின்றது.

இந்துவாக இருந்தாலும் சரி கிறிஸ்த்தவராக இருந்தாலும் சரி பிறரது மனம் வேதனைப்படாதவண்ணம் நடந்தால் எந்தப் பிரச்சினையும் தோன்றாது என முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .