Super User / 2012 பெப்ரவரி 26 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு புனித வின்சனட் மகளிர் பாடசாலையில் சரஸ்வதி சிலை விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை முற்று முழுதான ஒரு அரசியல் நடவடிக்கை என மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையின் அருட் போதகர் அருட்திரு டெரன்ஸ் அடிகளார் தெரிவித்தார்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மதங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதில் அரசியல் நடாத்த முயலும் சிலரது நடவடிக்கையின் விளைவு தான் இந்த சிலை விவகாரம் என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர்; வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடல் கடந்து 6,000 மைல்கள்; தூரம்; கஷ்;டப்பட்டு பிரயாணம் செய்து தியாக சிந்தையோடு வந்த மெதடிஸ்த்த மிஷனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித வின்சன்ட் மகளிர் தேசிய உயர் தர பாடசாலை 192 வருடம் பழமை வாய்ந்தது என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.
மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வளர்ச்சி கருதி அவர்களும் சமூகத்தில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதை நோக்காக கொண்ட கிறிஸ்தவ மிஷனரிமார்கள் இனம் மதம் சாராது கல்வி பணியிலே மிக மும்முரமாக ஈடுபட்டு மட்டக்களப்பு சமுதாயத்தின் உயரிய நிலைக்கு வித்திட்டனர்.
இன்று இந்த பாடசாலை கிழக்கு மாகாணத்திலே தலைநிமிர்ந்த பாடசாலையாக திகழ்வது பெருமைக்குரிய விடயமாகும்.
மெதடிஸ்த மிஷனரியால் நடத்தப்பட்டு வந்த இந்த பாடசாலை 1961ஆம் ஆண்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் சில முக்கியமான நிபந்தனைகளுடன் தான் பாடசாலை கையளிக்கப்பட்டது.
கிறிஸ்தவ அடையாளங்கள் கிறிஸ்த மானவர்களின் எதிர்காலம் மெதடிஸ்த திருச்சபையின் தொடர்ச்சியான கண்காணிப்பு இப்படி பல நிபந்தனைகளுடன் தான் இந்த கையளிப்பு இடம்பெற்றிருந்தது.
அன்று தொடக்கம் கடந்த 21ஆம் திகதி வரைக்குமான காலப்பகுதிகளில் பாரம்பரியங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் பேணப்பட்டு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையிலேயே பாடசாலை வளர்ச்சி அடைந்து வந்தது என்பது மேன்மைக்குரியதும் பாராட்டடுதற்குரியதுமான விடயமாகும்.
ஆனால் கடந்த 22.02.2012 திகதி நடைபெற்ற ஒரு சம்பவமே மட்டக்களப்பு சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சரஸ்வதி சிலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை 22.02.2012 அன்று காலை அறிந்ததுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எமது கருத்துக்களையும் சிலை அமைப்பதால் நிகழப்போகும் ஏற்படக்கூடியதான எதிர்விளைவுகளையும் பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்தோம்.
ஒரு பாரம்பரி கிறிஸ்தவ பாடசாலையில் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் இது போன்ற நடவடிக்கைகள் எவ்வாறு கிறிஸ்தவர்களின் மனங்களில் காயத்தை ஏற்படுத்தும் என்பதையும் பணிவாகத் தெரிவித்திருந்தோம்.
அத்தோடு இது சம்பந்தப்பட்ட அனைத்து அரச அலுவலகங்களிலும் இதற்கான அனுமதி பெறப்பட்டனவா என வினவிய போது கல்வி திணைக்களத்தின் பொறியியலாளர் இதற்கு தாம் அனுமதி வழங்கவில்லை என கூறினார்.
அதிபரின் உடந்தையுடன்; ஒரு சிலரின் தூண்டுதலினாலும் தான் இந்நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் 22.02.2012 மாலை திருச்சபையாரும் பழைய மாணவர்களும் ஆசிரியர்கள் சிலரும் சமூக நலன்விரும்பிகளும் பாடசாலைக்கு வருகை தந்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு இதனை கொண்டுவந்தனர்.
முதலமைச்சர் சிலை நிறுவும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிடும்படியும் மண்டப திறப்பு விழா முடிவடைந்த பின்பு அனைத்து தரப்பினரும் கூடி கலந்தாலோசித்து இறுதி தீர்மானத்துக்கு வருவோம் என ஆலோசனை கூறினார்.
முதலமைச்சரின் இவ்வறிவுறுத்தலையும் மீறி சிலரின் தூண்டுதலால்; 23.02.2012 அதிகாலை 00:10 மணியளவில் சிலை வைக்கப்பட்டது. இதனை அறிந்த நாம் மட்டக்களப்பு பிரதி பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு அதிகாலை 01:00 மணிக்கு கொண்டுவந்தோம்.
இச்சிலையை 23.02.2012 காலை 06:00 மணிக்கு முன்பு தாம் அகற்றுவதாக உறுதியளித்தார். இதன் பிரகாரம் நள்ளிரவில் இரகசியமாக வைக்கப்பட்ட சிலை 09 மணித்தியால இடைவெளியில் பொலிசாரின் மேற்பார்வையில் அன்றைய தினம் நடைபெறவிருந்த கட்டட திறப்பு விழா ஆரோக்கியமான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்க்காக அகற்றப்பட்டதே தவிர உடைத்து எறியப்படவில்லை.
இச்சிலை வைப்பிற்கு அனைத்து மாணவர்களினதும் அனைத்து ஆசிரியர்களினதும் அனைத்து பழைய மாணவர்களினதும் முழு சம்மதம் பெறப்படவில்லை. அத்தோடு அனைத்து உயரதிகாரிகளின் உத்தரவுக்கு மீறியே இச்சிலை மிகவும் கள்ளத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் இரகசியமாகவும் பாடசலையின் வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் ஒரு சிலரின் பிரசன்னத்தின் மத்தியில் வைத்தமைக்கான காரணம் என்ன?
ஒரு சிலரின் சுய இலாபத்திற்காக ஏற்படுத்தப்பட்ட இச்செயற்பாடானது இன்று மாணவர்கள் ஆசிரியர்கள் சமூக மட்டத்தில் ஆரோக்கியமற்ற புறச்சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. அரசிடம் பாடசாலைகள் கையளிக்கும் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றிய சரியான விளக்கமும் தெளிவும் தற்போதைய தலைமுறையினருக்கு இல்லை.
அனைத்து கிழக்கு மக்களும் கல்வி ஒளியை காண வேண்டும் அவர்களும் சமூகத்தில் நல்ல பிரஜையாக வரவேண்டும் என பல கிறிஸ்தவ மிஷனரி மார்கள் தமது சொந்த நாட்டை விட்டு உறவுகளை துறந்து தமது உயிரையும் தியாகம் செய்து இரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி பாடுகள் பட்டு கட்டிய மிஷன் பாடசாலைகளுக்கு தமிழ் பேசும் சமூகம் கொடுக்கும் மரியாதையும் நன்றி கடனும் இதுதானா?
கடந்த 192 வருட வரலாற்றில் 23.02.2012 அன்று நள்ளிரவு 00.10 மணிக்கு முன்பு பாடசாலையில் அப்படிப்பட்ட சிலை இருக்கவேயில்லை என்பது மட்டக்களப்பு வாழ் அனைத்து மக்களுக்கும் தெரிந்த உண்மை.
இந்நிகழ்வால் ஏற்பட்டுள்ள இறுக்கமான பிரிவினையான வேதனையான சூழ்நிலை மாற வேண்டும் என நாங்கள் பிராத்திக்கிறோம். சமூகத்தில் இயல்பு நிலை ஏற்பட வேண்டும் எமது முழு எண்ணமும் பிராத்தனையும்மாகும்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
Mano Wednesday, 29 February 2012 12:43 PM
கொலும்பிலும் சில கிறிஸ்தவ பாடசாலைகளில் இந்து மானவர்களுக்கு விபூதி வைக்க தடை!
Reply : 0 0
kaniyan Wednesday, 29 February 2012 12:46 PM
சரஸ்வதி சிலையை அகற்றியதே முதல் தவறு. புத்தர் சிலையை வைத்திருந்தால் அகற்றத்தான் முடியுமா உங்களால் ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago