Suganthini Ratnam / 2012 மார்ச் 04 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் 18ஆம் திகதிகளில் மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் ஜெ.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட கிழக்கு மாகாணத்தில் உள்ள உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago