Super User / 2012 மார்ச் 05 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி தாய்லாந்து விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் தாய்லாந்தின் தலைநகர் பங்கொக்கில் நடைபெறவுள்ள மாநாட்டில் மாகாண அமைச்சர் சுபைர் கலந்துகொள்ளவுள்ளார்.
மாகாண மட்டத்தில் சுகாதார துறையை மேம்படுத்தல் மற்றும் தெற்காசிய நாடுகளில் ஏற்படும் அனர்த்தம் ஆகியன தொடர்பிலேயே இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹான் புஷ்பகுமார, சப்ரகமு மாகாண சுகாதார அமைச்சர் பானு முனுப்பில்ல மற்றும் வட மேல் மாகாண சுகாதார அமைச்சர் பியசேன ஜயந்த ஆகியோர் மாகாண அமைச்சர் சுபையிருடன் தாய்லாந்து பயணமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago