Suganthini Ratnam / 2012 மார்ச் 06 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள உலமாக்கள் சிலர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்தனர்.
பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூதின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு விஜயம் செய்த இவர்கள், ஏறாவூர் முகைதின் ஜும் ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற வைபவத்திலும் கலந்து கொண்டனர்.
அத்துடன், கேரளா மாநிலத்திலுள்ள மர்கஷுல் ஸஹ்வத்துஸ் ஸுன்னியா அரபுப் பல்கலைக்கழகத்தின் கிளையொன்றையும் ஏறாவூரில் நிர்மாணிப்பதற்கான இடத்தையும் இவர்கள் பார்வையிட்டனர்.
இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள மர்கஷுல் ஸஹ்வத்துஸ் ஸுன்னியா என்னும் அரபுப் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அபூபக்கர் அஹமட் தலைமையில் இவ் உலமாக்கள் விஜயம் செய்தனர்.
இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
34 minute ago
1 hours ago
4 hours ago
gnani Tuesday, 06 March 2012 05:05 PM
இன்னுமொரு இயக்கம் உருவாகி மற்றொரு பிரச்சினையை சமுகத்தில் உண்டாக்காமல் இருந்தால் அதுவே சமுகத்திக்கு செய்யும் பெரும் பணி, ஏற்கனவே 23,000 சனத்தொகை கொண்ட ஊரில் ஐந்து அரபு கல்லூரிகள் உள்ளன.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago