Super User / 2012 மார்ச் 07 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு இடம்பெற்றது.
மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இலங்கை கரித்தாஸ் நிறுவனம் மற்றும் எகட் கரித்தாஸ் நிறுவனங்களின் அனுசரனையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை மட்டக்களப்பு ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாமிபிள்ளை, குருக்கள், துறவிகள், அருட்த ந்தைகள், அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பாடசாலைகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தேசிய நல்லிணக்கம் என்ற தலைப்பிலும் இன முரண்பாட்டுக்கான அரசியல் தீர்வு எனும் தலைப்பில் மாற்றுகொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் மிராஹ் ரஹீமும் மனித உரிமைகள் எனும் தலைப்பில் முரண்பாட்டின் போதான மனித உரிமைகள் சட்டம் மற்றும் சமூகத்துக்கான அமைப்பின் தலைவர் ருக்சான் பெர்ணாண்டோ ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago