Suganthini Ratnam / 2012 மார்ச் 08 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி,ரி.லோஹித்)
எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் இயக்குநரும் மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் தற்போதைய நிதிப்பொறுப்பாளருமான கலாநிதி அருட்தந்தை சிறிதரன் சில்வெஸ்ட்டர் தனது 50 வயதில் இன்று வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
திடீரென சுகவீனமடைந்த இவர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்முனை பற்றிமா கல்லூரி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இவர் கல்வி கற்றார். மட்டக்களப்பு, தாண்டவன்வெளியை சொந்த இடமாகக் கொண்ட இவர், 1993ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருமலை, மூதூர், கல்லாறு ஆகிய பணித்தளங்களில் குருவாகப் பணியாற்றினார்.
12 வருடங்கள் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குநராக கடமையாற்றி சுனாமி மற்றும் அனர்த்தம் போன்றவற்றின்போது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மனிதாபிமானப்பணி செய்து அனைத்து சமூகங்களினதும் நன்மதிப்பை இவர் பெற்றிருந்தார்.
இவர் இந்தியாவின், பெங்களூர் நகரில் அமைந்துள்ள கல்வி முகாமைத்துவம் மற்றும் சமூக சேவைகள் என்னும் நிறுவனத்தின் 'சர்வோட்டம் - நியூடில்லி' என்ற அமைப்பினால் கடந்த வருடம் ஜூன் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட 'கற்றறிவாளர் விருது - 2010' விழாவின்போது பேராசிரியர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
30 minute ago
3 hours ago
Mohamed Ziyath Thursday, 08 March 2012 04:18 PM
மக்களின் நலன்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக மக்களுக்காக அரும் பெரும் சேவையாற்றியவர் இவரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்போம்.
Reply : 0 0
Secretary Thursday, 08 March 2012 11:21 PM
அருட் தந்தை அவர்களின் பூதவுடல் அஞ்சலிக்காக மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் வைக்கப்பட்டு சனிக்கிழமை மாலை திருப்பலியின் பின் ஆலையடிசோலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago