Suganthini Ratnam / 2012 மார்ச் 08 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
பெண்கள் எதிர்நோக்கும் பிரதான இடையூறுகளை எதிர்கொள்வதற்கு பெண்களை வலுவூட்ட வேண்டுமென சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'இலங்கைப் பெண்களுக்கு சமவுரிமை, பொருளாதார, சமூக, அரசியல், கலாசார ரீதியாக அவர்களுக்கான சந்தர்ப்பங்களை வழங்குதல். பெண்கள் எதிர்நோக்கும் பிரதான இடையூறுகளை எதிர்கொள்வதற்கு பெண்களை வலுவூட்டுதல். பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசியல் ரீதியாக சட்டங்களை வலுப்படுத்துவதுடன் கற்பழிப்பு, வேறுபாடுகள், சமூக ரீதியான அநீதிகளை ஒழித்துக்கட்டுதல்.
சச்சரவுகளுக்கு மாத்திரம் பெண்கள் முகம் கொடுப்பவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் சமாதானத்தின் முன்னோடிகள். சமாதானம் நிரந்தரமாக நிலைக்க வேண்டுமானால் பெண்களின் குரல் ஓங்கியொலிக்க வேண்டும் என்பதே எனது அவாவாகும். மீண்டும் உலகப் பெண்களின் பாதுகாப்புக்காகவும் நலன்புரிக்காகவும், 'கற்பழிப்பை உடனே நிறுத்து' என்ற வேண்டுகோலும் பலமாக ஒலிக்கும்' என்றார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago