2026 மே 09, சனிக்கிழமை

dd

பாசிக்குடாவில் அவசர உதவிப் படகுச் சேவை ஆரம்பம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 08 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாப ராஜபக்ஷவின் ஆலோசனையில் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் உயிர்க் காப்புப் பிரிவினரால் அவசர உதவிப் படகுச் சேவை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பாசிக்குடா கடற்கரைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் நலன் கருதி இப் படகுச் சேவை கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக பாசிக்குடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமரசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.ஏ.ஜெகத் அபயஸ்ரீ குணவர்த்தன, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜீ.டபிள்யூ ஆர்.டி.செனவிரத்ன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்எம்.ஏ.சமரகோன், ஏறாவூர் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என்.பி.ஏ.எஸ்.ரத்னசூரிய, வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், மதத் தலைவர்கள், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .