Super User / 2012 மார்ச் 10 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித், எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று பிற்பகல் ஒருவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு, புளியடி வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த மகேந்திரன் (44வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி எம்.பி.எம்.தாஹா தெரிவித்தார்.
புளியடி வீதியில் ஒரு குழுவினர் உரையாடிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட முறுகலையடுத்தே குறித்த நபர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் படுகாயமடைந்த அவர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்ததாகவும் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி எம்.பி.எம்.தாஹா தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மூவர் தொடர்புபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த அவர், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago