Kogilavani / 2012 மார்ச் 12 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதரிகள் சிலர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணைந்து கொண்டனர்.
இந்த வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 150க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கட்சியின் அங்கத்துவ பத்திரத்தை பெற்றுகொண்டனர்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆசாத் மௌலானா, உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .