Kogilavani / 2012 மார்ச் 14 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் சேவா சங்க மண்டப அடிக்கல் நாட்டும் விழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தேவாலய பங்குத்தந்தை அருட் திரு லேஸ் மொறாயஸ் தலைமையில் நடைபெற்றது.
திருமலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கலந்து கொண்டு வழிபாடுகளை நடத்தியதுடன் புனித அந்தோனியார் சேவா சங்க மண்டபத்துக்கான அடிக்கல்லையும் நட்டு வைத்தார்.
இக்கட்டிட நிர்மாண பணிகளுக்கு 30 லட்சம் ரூபாய் செலவிடப்படுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வில், உதவிப் பங்குத்தந்தை தேவ சீலன், எகெட் நிறுவன தொடர்பாளர் மைக்கல், தேவாலய பங்கைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ் ஆலயத்தின் நீண்ட காலத் தேவையாக உள்ள இவ் மண்டபத்தின் நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவி செய்யவிரும்புபவர்கள்; பங்குத்தந்தையுடன் தொடர்பு கொள்ளுமாறு புளியந்தீவு புனித அந்தோனியார் ஐக்கிய சேவா சங்கம் கோரிக்கை விடுத்தள்ளது.
.jpg)
.jpg)
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago