Kogilavani / 2012 மார்ச் 17 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடியில் மக்கள் வங்கி முகாமையாளர் ஒருவரது வீடு நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளாதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமையலறைக் கூரைப் பகுதியின் ஊடாக வீட்டுக்குள் நுழைந்துள்ள கொள்ளையர்கள் 4 வீடியோ கமராக்கள், 50 பவுண் நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .