Suganthini Ratnam / 2012 மார்ச் 18 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்,எம்.சுக்ரி)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
அத்துடன், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜகத் புஸ்பகுமார, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், பிரியானி விஜேசேகர, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, துரையப்பா நவரட்னராஜா, மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் தலைமையுரையினை கொள்கை பரப்புச் செயலாளர் ஆசாத் மௌலான நிகழ்த்தினார். தொடர்ந்து தலைவர், பணியக உறுப்பினர்கள் அறிமுகத்தினை பூ. பிரசாந்தன் நடத்திவைத்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராக சிவனேசத்துரை சந்திரகாந்தன், சிரேஷ்ட பிரதித்தலைவராக நாகலிங்கம் திரவியம், பொதுச்செயலாளராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், நிர்வாக பிரதித்தலைவராக கந்தையா யோகவேல், நிர்வாக உப செயலாளராக லயன் ஏ.செல்வேந்திரன், மற்றுமொரு உதவி செயலாளராக எஸ்.ஜெகநாதன், தேசிய பொருளாளராக ஆறுமுகம் தேவராஜ், கட்சியின் தேசிய அமைப்பாளராக எட்வின் கிருஸ்ணானந்தராஜா, கொள்கை பரப்புச் செயலாளராக எம்.என்.கன்சீர் (ஆசாத் மௌலானா), உதவிச் செயலாளராக (ஒருங்கிணைப்பு மேற்பார்வை) சி.ஜெயராஸி, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக எஸ்.ஆர்.மணிவண்ணன், அம்பாறை மாவட்ட அமைப்பாளராக சோமசுந்தரம் புஸ்பராசா, திருமலை மாவட்ட அமைப்பாளராக குமாரசாமி நயனகாந்தன், அயலக உறவு இணைப்பாளராக மதி குமாரசாமி, வாழ்வாதார மேம்பாட்டளராக சந்திரா, ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளராக கணபதிப்பிள்ளை மோகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
Sathishkumar Monday, 19 March 2012 11:20 AM
இந்த கொடியை மாற்றியமைக்க வேண்டும்.
Reply : 0 0
pasha Monday, 19 March 2012 03:20 PM
முதலமைச்சர் பதவியை கையில் வைத்து கொண்டே சாதாரண உள்ளுராட்சி தரத்தில் கூட வெல்ல முடியாத இவர்களுக்கு ஒரு கட்சி தேவையா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago