Super User / 2012 மார்ச் 19 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசத்தின் மகிழவெட்டவானில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் ஆற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டிருந்த போது, முதலையினால் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
23 வயது மதிக்கத்தக்க இளம் குடும்பஸ்த்தரான முத்தையா சந்திரகாந்தன் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, தான் வீசிய வலை கல் ஒன்றில் சிக்கியதனால் அதனை மீட்க முனைந்துள்ளார். இதன்போதே முதலையினால் இழுத்துச்செல்லப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சடலத்தினை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தேடி வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago