Kogilavani / 2012 மார்ச் 19 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செலகப்பிரிவுக்குட்பட்ட தம்பாலஞ்சோலை, வெலிகா கண்டி, போப்பாவெளி பிரதேசங்களில் உறவுகள் (கணவன், சகோதரன், மகன்மார்) காணாமல் போன குடும்பப் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் இன்று காலை நடத்தப்பட்டது.
இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பெண்கள் பிரிவு இணைப்பாளர் லிவினா அசாந்தி, வடக்கு கிழக்கு மற்றும் பொது இணைப்பாளர் அந்தனி ஜேசுதாசன் ஆகியோர் இப்பெண்களுடன் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலின் போது குடும்பப் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள்,
'2006 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் எமது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து மீண்டும் வீடுகளுக்கு 2009ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் மீளக்குடியேறினோம்.
அவ்வேளையில் எமக்கு வீடுகளுக்கான சமையல் உபகரணங்கள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஒரு சில நிறுவனங்களால் தொழில்களுக்கென சில உதவிகள் செய்யப்பட்டன.
எமது குடும்பத்தினர்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ், அரச அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் முறையிட்டோம். ஆனால் இதுவரை எந்த விதமான பதில்களோ பிரயோசனங்களே ஏற்படவில்லை.
எம்முடைய குடும்பங்களைக் கொண்டு நடத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதிலும், எமது அன்றாட நாட்களை நகர்த்துவதிலும் பல பிரச்சினைகள் எமக்குள்ளது. இவற்றினை சீர் செய்வதற்கு எம்மால் முடியாமல் உள்ளது' என குடும்பப் பெண்கள் தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில் இப்பிரச்சினைகள் தொடர்பில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதுடன், தமது குடும்பத்தவர்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் அரசியல் வாதிகள் ஊடாக மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வது என முடிவு காணப்பட்டது.
.jpg)
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago