2026 மே 07, வியாழக்கிழமை

சமுர்தி அதிகார சபையின் அனுசரணையுடன் புத்தாண்டுச் சந்தைகள்

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், சுக்ரி)


புதுவருட பிற்பபை முன்னிட்டு பொதுமக்கள் தமது தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் சமுர்த்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் பிரதேச செயலகங்கள் தோறும் புத்தாண்டு சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களில் இந்த புத்தாண்டு சந்தைகளை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான பிரதேசத்துக்கான புத்தாண்டுச்சந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான சந்தையை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அரம்பித்து வைத்தார்.

இதன்போது, திவிநெகும திட்டத்தின் கீழ் உற்பத்திசெய்யப்பட்ட வீட்டுப்பாவணை பொருட்கள், உணப்பொருட்கள், ஆடைகள், சிற்றுண்டிகள் என்பன விற்பனைக்காக வைக்கப்பட்டன.

38க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .