2026 மே 07, வியாழக்கிழமை

செங்கலடி ஒருமுழச்சோலை கிராமத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித்)


மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒருமுழச்சோலை கிராமத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன்போது கிராம மக்களின் தேவைகளை கேட்டறியும் முகமாக ஒருமுழச்சோலை ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் மக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் தலைமையில்; தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில்  கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, அக்கிராமத்திற்கு வீதி, வீடு, மின்சாரம்  போன்றவற்றை பெற்றுதருவாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பில், கிழக்கு மாகான முதலமைச்சரின் ஊடகச் செயலாளரான ஆ.தேவராஜா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.   





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .