2026 மே 07, வியாழக்கிழமை

பாலத்திலிருந்து தவறி வீழ்ந்து இரு இளைஞர்கள் படுகாயம்

Super User   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, பனிச்சங்கேணி பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  பயணம் செய்த  இளைஞர்கள் இருவர் பாலத்திலிருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் வசிக்கும் இவ்விரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் வாகரையூடாக திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்தபோதே பாலத்திலிருந்து வீழ்ந்துள்ளனர்.

பொதுமக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட இவர்கள், படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .