2026 மே 07, வியாழக்கிழமை

மணல் ஏற்றுபவர்களின் பிரச்சினைக்கு தீர்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு மயிலவட்டவான் ஆற்றில் இருந்து ஆற்றுமண் ஏற்றுவதில் தொழிலாளிகளும், ஏற்றுனர்களும் எதிர்நோக்கி வந்த அசௌகரிய நிலைமைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  தீர்த்து வைத்தார்.

குறித்த பிரதேசத்திற்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்த அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருடனும் தொடர்பு கொண்டு மணல் ஏற்றுவதில் இருந்த அசௌகரியங்களை உடனடியாகத் தீர்த்து வைத்தார். 

மாவட்டத்தில் அதிகரித்துவரும் அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவதற்கும், தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும் இவ்வாறான நேரடி விஜயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை குறித்து அவ்விடத்தில் கூடிய தொழிலாளிகளும், பொது மக்களும் பெருமையுடன் நன்றி தெரிவித்தார்கள். 

இவ் விஜயத்தின் போது முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், முதலமைச்சரின் செயலாளர் எஸ்.அமலநாதன், முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜ், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் தே.வினோத், த.ம.வி.பு.கட்சியின் ஒன்றிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .