2026 மே 07, வியாழக்கிழமை

வாகன விபத்தில் விறகு வியாபாரி பலி

Super User   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

ஏறாவூர், சந்திவெளியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திகிலிவெட்டை, சந்திவெளியைச் சேர்ந்த 55 வயதான சு.கந்தசாமி என்ற விறகு வியாபாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விற்பனைக்காக விறகினை துவிச்சக்கர வண்டியில் எடுத்துச் செல்லும் போது, எதிரே வந்த வான் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாகன சாரதி ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த வானும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரனைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .